விவாகரத்து ஆன பின் ஒன்றாக போட்டோ போட கூடாது.. புதிய கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்!

0
254

விவாகரத்து ஆன பின் கணவனோ, மனைவியோ தங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. ஒரு விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ எம் கான்வில்கர், டி ஒய் சந்திராசாவுத் ஆகியோர் அடங்கிய அமர்வு விவாகரத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியது. அதில் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மஹாராஷ்டிராவை சேர்ந்த பொறியாளர் அவருடைய மனைவிக்கு 37 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி எப்படிப்பட்ட புகைப்படமாக இருந்தாலும் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட கூடாது என்றுள்ளனர். எதிர்காலத்தில் அது பிரச்சனையாக மாற கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த உத்தரவை கவனமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

LEAVE A REPLY