ஹலோ திருடாஸ்.. கம்பம் கனரா வங்கிக்குப் போங்க. இங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!

0
161

வீட்டில் நகைகள் இல்லை என்றும் நகைகள் அனைத்தும் குறிப்பிட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்றும் வித்தியாசமான முறையில் தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் அசந்தா கோவணத்தையே உருவிவிடும் இந்த காலத்தில் பளபளப்பாக ஒரு வீடு பூட்டியிருந்தால் விட்டுவிடுவார்களா என்ன. கரெக்டா நோட்டம் போட்டு வீட்டையே காலி செய்துவாங்களே. இதனாலேயே வீட்டை பூட்டி விட்டு எங்கு போனாலும் பொழுது சாய்வதற்குள் வந்துவிடுவார்கள்.

இல்லாவிட்டால் உறவினர்களிடம் சாவியை கொடுத்து வீட்டில் படுக்க சொல்லிவிடுவார்கள். இன்னும் சிலரோ காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு பூட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கு ஒருத்தர் என்ன செய்துள்ளார் தெரியுமா.

திருடர்கள் கவனத்துக்கு என்று ஒரு பலகையில் எழுதியுள்ளார்கள். அதில் இந்த வீட்டில் உள்ள நகைகளெல்லாம் கம்பம் கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் நகை திருட வருபவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY