குட் மார்னிங் மெசேஜ் அனுப்பியே இந்தியர்கள் இன்டெர்நெட்டை நிரப்பிவிடுகிறார்கள்; கூகுள்

0
139

இந்தியர்கள் குட் மார்னிங் என்ற மெசேஜை மில்லியன் கணக்கில் அனுப்பி இன்டெர்நெட் சேமிப்பை நிரப்பிவிடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

கணினி, பெண் டிரைவில் படங்கள், பாடல்கள் வைப்பது போல், இணையதளம் வாட்ஸ்அப் போன்றவைகள் மூலம் நாம் அனுப்பும் செய்திகளானது, இண்டெர்நெட் டிரைவ் எனப்படும் சேமிப்பு கிடங்கில் பதியப்படுகிறது.

இந்நிலையில், இந்தியர்கள் குட்மார்னிங் என்ற மெசேஜை மட்டும் தினமும் மில்லியன் கணக்கில் அனுப்பி வருவதாகவும், இதனாலேயே இண்டர்நெட் சேமிப்பு நிரம்பி விடுவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் சிலிகான்வாலி பகுதியிலுள்ள கூகுள் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிவந்த தகவலின்படி, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும்,

அவர்கள் தினமும் மற்றவர்களுக்கு காலை வணக்கம் சொல்வதுடன், கவிதைகள், தன்னம்பிக்கை வரிகள் அனுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY