3.5ஜிபி/நாள் வழங்கி ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு ஆட்டம் காட்டும் ஐடியா.!

0
65

இந்திய டெலிகாம் துறையில் நிலவும் கடும் கட்டண யுத்தத்தின் விளைவாக, ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் ரூ.199/- திட்டத்தை திருத்தியதை தொடர்ந்து தற்போது சில அன்லிமிடெட் தொகுப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள ஐடியாவின் வரம்பற்ற ரீசார்ஜ் திட்டங்களானது, சந்தையில் கிடைக்கும் இதர அனைத்து நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் செல்லுபடி காலத்துடனும் பொருந்தக்கூடிய வண்ணம் உருவாக்கம் பெற்றுள்ளது.

இந்த புதிய திட்டங்களானது ஏற்கனவே பெரும்பாலான ஐடியா வட்டாரங்களில் கிடைக்கின்றன. கிடைக்கப்பெறாத இதர வட்டங்களுக்கு படிப்படியாக உருட்டப்படலாமென நாங்கள் நம்புகிறோம்.

ஒவ்வொரு ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும்.!

இந்த திட்டங்களின் சிறந்த பகுதி என்னவெனில், இவைகள் அனைத்துமே ஒவ்வொரு ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் திறந்தவெளி சந்தை திட்டங்களாகும். இதன் விலை நிர்ணயம் வட்டாரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம் என்படகாய் கவனத்தில் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

ஷேஷட்ஸ் பேக்ஸ் ஐடியா பயனர்கள்

இப்போது ரூ.9, ரூ.19, ரூ.59 மற்றும் ரூ.93/- ஆகிய திட்டங்களின்கீழ் முறையே ஒரு நாள், இரண்டு நாள், வாராந்திர மற்றும் பத்து நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த திட்டங்கள் அனைத்துமே வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் / நாள் மற்றும் முறையே 100எம்பி, 150எம்பி, 500எம்பி மற்றும் 1ஜிஇ அளவிலான டேட்டாவை வழங்கும்.

அன்லிமிடெட் வாய்ஸ் / எஸ்எம்எஸ் + 1ஜிபி டேட்டா பேக்ஸ்

ஐடியா செல்லுலாரி நிறுவனம் இரண்டு வரம்பற்ற குரல் தொகுப்புகளை வழங்குகிறது. ரூ.149 மற்றும் ரூ.179/- ஆகிய இரண்டு திட்டங்களுமே 1 ஜிபி அளவிலான தரவை முறையே 21 மற்றும் 28 நாட்களுக்கு வழங்குகிறது. லோ-எண்ட் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும் சிறப்பானதொரு தேர்வாகும்.

தேர்வு செய்யும் விருப்பம்

இந்த 1ஜிபி டேட்டா வழங்கும் இரண்டு திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் / நாள் நன்மையையும் வழங்குமென்பதும், மேற்குறிப்பிட்ட ஷேஷட்ஸ் பேக்ஸ் (2 நாள் அல்லது அதற்கு மேலான வேலிடிட்டி கொண்ட திட்டங்கள்) மற்றும் இந்த 1ஜிபி பேக்ஸ் ஆகிய அனைத்து திட்டங்களுமே எப்போது முழுமையான டேட்டாவை பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்யும் விருப்பத்தை பயனர்களுக்கு வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

1ஜிபி/நாள் பேக்ஸ்

ஐடியா நிறுவனமானது பல்வேறு விலை பிரிவுகள் மற்றும் செல்லுபடி காலங்கள் கொண்ட 1ஜிபி/நாள் டேட்டா திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ரூ.198/-ஆனது 28 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. அதே மாதிரியான (1ஜிபி/நாள் டேட்டா+ அன்லிமிடெட் வாய்ஸ்+ எஸ்எம்எஸ்) நன்மைகளை ரூ.398, ரூ.449 மற்றும் ரூ.509/- என்கிற விலை புள்ளிகளில் முறையே 70 நாட்கள், 82 நாட்கள் மற்றும் 90 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

நாளொன்றிற்கு ஹை டேட்டா யூஸேஜ் பேக்ஸ்:

ஐடியா செல்லுலாரின் ஹெவி-டேட்டா பயனராக நீங்கள் இருந்தால் 28 நாட்கள் அல்லது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் 6 நீண்ட கால திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். ஐடியாவில் ரூ.697/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.357 மற்றும் ரூ.897/- ஆனது முறையே 28 நாட்கள் மற்றும் 70 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது.

2.5ஜிபி மற்றும் 3.5ஜிபி நாள்

ஒன்றிற்கு 2.5ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.599/- மற்றும் ரூ.1197/- ஆனது முறையே 28 நாட்கள் மற்றும் 70 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மற்றும் நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.799/- ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ஆறு திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ்+ எஸ்எம்எஸ் நன்மைகளை அவற்றிற்கே உரிய செல்லுபடி காலம் வரை வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரம் 1000 நிமிடங்கள்

அனைத்து வகையான ஐடியாவின் திட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையானது நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரம் 1000 நிமிடங்கள் என்கிற வரம்பை கொண்டுள்ளன என்பதும், அந்த வரம்பிற்கு பின்னர் நொடிக்கு 1 பைசா என்கிற விகிதத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY