விரைவில் : வாட்ஸ்ஆப்யில் பணம் பரிமாற்றம் செய்யலாம் தெரியுமா ?

0
69

வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் செயலிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் இந்த பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் யுபிஐ (UPI) சார்ந்த வழிமுறையை செயல்படுத்த இப்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த வாட்ஸ்ஆப் செயலி.

அடுத்தமாதம்:

வாட்ஸ்ஆப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி பொறுத்தவரை அடுத்த மாதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்தியாவின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது.

வங்கிகள்:

ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் :

வியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி முக்கிய அம்சம் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.

ப்ரோஃபைல் அம்சம்:

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் உள்ள ப்ரோஃபைல் அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைதளம் அதன்பின்பு வியாபாரம் சார்ந்த கூடுதல் தகவல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு:

மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், ஃபைல்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற வசதிகள் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலிப் பொறுத்தவரை முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா:

இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஇ பின்வரும் வாரங்களில் மற்ற நாடுகளுக்கும் இந்த பிஸ்னஸ் செயலி வழங்கப்படும்.

LEAVE A REPLY