நான் நித்தியானந்தாவின் ப்ரியசகி! அதிர வைக்கும் சிஸ்யைகளின் முகநூல் பதிவுகள்! (வீடியோ)

0
107

கடந்த வாரம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பேசிய வைரமுத்து தான் நாளிதழில் எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரையை அங்கே வாசித்தார். தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

வைரமுத்துவின் நாவிற்கு பத்து லட்சம், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், ஆண்டாளைப் பற்றி தவறாக பேசியவரை கொலை செய்வோம்,மன்னிப்பு கேட்கும் வரை உண்ணவிரதம்,ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்று எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

வைரமுத்துவிற்கு பா.ஜ.க.,வினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்றைய தினம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த ஃபேஸ்புக் வாயிலாக சில சிறுமிகள் வைரமுத்துவை மிகவும் மோசமாக திட்டி வீடியோவை வெளியிட்டிருந்தார்கள்.

அந்த வீடியோவில் பேசிய பெண்ணுக்கும் அவரைச் சுற்றியிருந்த சிறுமிகளுக்கும் பதினைந்து வயதிற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் பேசிய பேச்சுக்களோ மிகவும் ஆபசமாக இருந்தது. ஆசிரமத்தில் வளரக்கூடியவர்களிடமிருந்து இப்படியான பேச்சுக்களை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள் தான்.

நித்தியானந்தா :

ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கிய நித்தியானந்தா தன்னுடைய அடுத்த அத்தியாயத்தை சத்தமின்றி துவங்கிவிட்டாரா என்றே தோன்றுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தா என்ற பெயர் மிக வேகமாக பரவியது . அதுவும் தன்னை சுவாமிஜி என்று சொல்லிக் கொள்ளும் நபரான நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்ககூடிய பெண்களை தன்னுடைய பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்று வீடியோ ஆதரமாக வெளியானது.

இதில் திரைப்பட நடிகை ரஞ்சிதாவும் சிக்கினார். கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் வழக்கும் நடைப்பெற்றது இறுதியில் விடுதலை செய்யப்பட்டார் நித்தியானந்தா.

நித்தியநந்திதா :

வைரமுத்துவை திட்டி வீடியோவில் பேசிய சிறுமியின் பெயர் மா நித்தியநந்திதா. இவர் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாம். பதினாறு வயது நிரம்பிய இந்தச் சிறுமி ஏழாம் வகுப்பிற்கு பிறகு தான் நித்தியானந்தாவின் குருகுல பள்ளியில் சேர்ந்திருக்கிறார். பார்ப்பனர்கள் குடும்பத்தில் பிறந்த இவர் தற்போது நித்தியானந்த சங்கத்தில் இளவரசி ஸ்தானத்தில் இருக்கிறாரம்.

வீடியோவில் :

வைரமுத்துவிற்கு எதிராக வெளியிடப்பட்ட வீடியோவில் ‘கவிப்பேரரசு எல்லாம் அப்பறம் மொதல்ல நீ மனுஷன், ஆம்பளன்றதுக்கு ஆதாரம் காமி… ஆண்டாள் கற்பின் மறுவடிவமாக திகழ்ந்தவர் அவரைப் பற்றி எப்படி தேவதாசி என்று கூற முடிகிறது. எல்லாரும் வணங்கக்கூடிய ஆண்டாளைக் கூட எப்படி ஓர் தேவதாசி என்று பார்க்க முடிகிறது.

லவ் :

நித்தியாநந்திதா உட்பட பல பெண்கள் நித்யானந்தாவின் புகைப்படத்தை பகிர்ந்ததோடு நித்தியானந்தாவையும் டேக் செய்து பல்வேறு போட்டோக்களையும் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலும் ஹிஸ் பிரின்சஸ் என்றும் ஹிஸ் பிரியசகி என்றும் ஹேஷ்டேக் இருக்கிறது.

லவ் ப்ரோப்போஸ் :

இங்கே காதலுக்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தால் இவர்கள் புது வித பெயரை வைத்து குரு, சுவாமிஜி ,பக்தி ,மகள் என புது விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இங்கே என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க வில்லை மாறாக நீ என்னைப் போல் ஆகிறாயா என்று நித்தியானந்தா சொன்ன வார்த்தைகளை ஸ்டேட்டஸாக போட்டு தன் முகநூலில் பகிர்ந்திருக்கிறார் ஒரு சிறுமி.

சிறுமிகளை மீட்க வேண்டும் :

அவர் எங்களுக்கு குரு, அவர் எங்களுக்கு பல சக்திகளை அளிக்கிறார், நான் அவரின் யுவராணி,ப்ரியசகி என்றெல்லாம் முழு மனதாக நம்புகிற சிறுமிகளை தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள அதிக நேரம் ஆகாது. அங்கிருக்கும் சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்ட தகுந்த மனநல ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

அனைவரும் சதி என்னும் முறை தவறானது என்று ஒப்புக் கொண்ட விஷயத்தையே சரியென்று நியாயப்படுத்தக்கூடிய இந்த சிறுமிகள் நித்தியானந்தா தங்களை பயன்படுத்திக் கொள்கிறாரா என்பதை அறியும் பருவத்திலோ சூழலிலோ இல்லை என்பது தான் சோகம்.

ஏதேதோ காரணத்தால் இங்கே ஏராளமான பெண் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாரும் குருகுல கல்வியையும், கடவுளைப் பற்றியும் மட்டுமே கற்கிறார்களா என்ற கேள்விக்கு நித்தியநந்திதாவின் வைரமுத்து குறித்தான வீடியோவே பதில் சொல்லும்.

LEAVE A REPLY