சட்டசபையில் முதல் முறையாக தினகரன்.. எங்கு அமர்ந்து இருக்கிறார் தெரியுமா?

0
136
Chennai: AIADMK(Amma) Deputy General Secretary TTV Dinakaran addressing media at his residence in Chennai on Friday. PTI Photo(PTI8_4_2017_000195A)

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தினகரன் பங்கேற்று இருக்கிறார். அவர் முதல்முறையாக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சுயேச்சை வேட்பாளர் என்பதால் பின்பக்கம் இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவை நிகழ்வுகளை அவர் கண்காணித்து வருகிறார்.

ஆளுநர் பேசுவதை கவனமாக அவர் கேட்டுக் கொண்டு இருந்தார். மேலும் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட புத்தகத்தை அவர் படித்துக் கொண்டு இருந்தார்.

சட்டசபை கூட்டம்

இந்த வருடத்தில் நடக்கும் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் காலை தொடங்கி இருக்கிறது. ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் ஆகும் இது.ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கி வைத்து பேசினார்.

முதல் தடவை

அதேபோல் ஆர்.கே நகர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கும் இதுதான் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகும். ஆர்.கே நகர் தேர்தலில் 89,013 வாக்குகள் பெற்று அபாரமாக வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எம்பியாக இருந்தாலும் இப்போது முதல்தடவை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார்.

அமைதி

அமைதி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த போதும் தினகரன் வெளிநடப்பு செய்யாமல் அவை நிகழ்வுகளை கவனித்து வருகிறார். முதல்முறை என்பதால் மிகவும் அமைதியாக காணப்பட்டார். மேலும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்டசபை நிகழ்வுகளை குறித்த புத்தகத்தை அவர் படித்துக் கொண்டு இருந்தார்.

இருக்கை

சட்டசபையில் தினகரனுக்கு 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 18 எம்.எல் .ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த இருக்கைகள் காலியாக இருக்கிறது. இந்த 18 பேரும் தினகரன் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY